2024 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் RR -அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் நேற்று தோல்வி அடைந்ததால் பிளே ஆப் சுற்றிலிருந்து பெங்களூரு அணி வெளியேறியது. இதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த மே 18ஆம் தேதி நடந்த போட்டியில் சிஎஸ்கே வை வீழ்த்திய பெங்களூரு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கு பலி தீர்க்கும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் ட்ரோல் வீடியோக்கள் மற்றும் மீம்ஸ் ஆகியவற்றை ட்ரெண்டிங் செய்ய அதற்கு ஆர் சி பி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.