காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான விஜயதாரணி பாஜகவில் இணைய போவதாக பேச்சு அடிபட்ட நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் விஜயதாரணி இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு டெல்லி பாஜக கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. இறுதியாக இன்று ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார்.