இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை நாட்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஒரு சில மாநிலங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி திரிபுரா, குஜராத், மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஹைதராபாத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், வங்காளம், லக்னோ, புதுடெல்லி, பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் இன்று மூடப்படும் எனவும் வங்கிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலமாக வங்கி சேவைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை சேர்த்து மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது