இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பல குளறுபடிகள் நடைபெற்று வருவதால் அரசு பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த 15 வருடங்களாக ஒரு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வரும் கிராமத்திட்ட ஊழியர்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கிராமத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராமத் திட்ட ஊழியர்களுக்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
