இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் பருவ மழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக ஹரியானா, டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு பகல் பெய்யும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தொடர் மழையால் தேங்கும் மழை நீர் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவு பரவி வருகின்றது.

பொதுவாகவே இந்த டெங்கு காய்ச்சல் பரப்பக்கூடிய கொசு மழை நீர் மற்றும் கழிவு நீர்களில் உற்பத்தி ஆகின்றது. அதனால் பொதுமக்கள் மற்றும் வணிக வளாகத்தினர் தங்களின் இடங்களில் மழை நீரை தேங்காய் விடாமல் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போது டெல்லி அரசு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் களைவு நீரை தேங்காவிட்டால் வீடுகளுக்கு ஆயிரம் ரூபாயும் நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.