இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு ஒரு பக்கம் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருந்தாலும் மாநில அரசு அதற்கான பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது குறிப்பிடத்தக்க குறை கடத்தி ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அது மட்டுமல்லாமல் மைக்ரோன் டெக்னாலஜி, அப்ளைடு மெட்டீரியல்ஸ், லாம் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் குறைக்கடத்தை திறன்களை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவிற்குள் குறைகலத்தை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சிக்கலான உபகரணங்களை தயாரிப்பது மற்றும் 60,000 பொறியாளர்களுக்கு லாம் ரிசர்ச்சியின் செமிவர்ஸ் தளத்தில் பயிற்சி வழங்குவது போன்ற ஒப்பந்தங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளார்.