பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன் மற்றும் சரத்குமார் ஆகியோரின் அரசியல் முடிவுகளை பகிரங்கமாக நியாயப்படுத்திப் பேசியுள்ளது அரசியல் களம் முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
‘ஒருவேளை சீமானும் விரைவில் பாஜகவில் இணையப் போகிறாரா?’ என்ற பரபரப்பான கேள்வியை இந்த நிகழ்வு உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியில் மேடையேறிப் பேசிய சீமான், பாஜக தலைவர்களின் கட்சி மாற்றத்தை முழுமையாக ஆதரித்துப் பேசினார். “அரசியல் கோட்பாடுகளும் நிலைப்பாடுகளும் இன்று ஒரு மாதிரியாக இருக்கும், நாளை முற்றிலும் மாறிவிடும்.
அதிமுகவில் இருந்த என்னுடைய மாமன் நயினார் நாகேந்திரன், இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறார். அதேபோல், அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரத்குமார், பின்பு தனி இயக்கம் நடத்தி, இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று அவர்களுக்குத் தயங்காமல் ஆதரவுக் குரல் கொடுத்தார்.
தொடர்ந்து பாஜக ஆதரவு தொனியில் பேசிய அவர், “இன்று சரி என்று படுவது நாளை தவறு என்று தோன்றும், அதுவே மீண்டும் அடுத்த நாள் சரி என்றும் தோன்றும். இதுதான் உண்மையான அறிவு, இதுதான் பகுத்தறிவு! ஒன்னாம் வகுப்பு பாடத்தை மட்டுமே ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டிருந்தால் அதற்குப் பெயர் படிப்பு கிடையாது. மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் புதிய எண்ணங்களும் புரிதல்களும் தோன்றும்.
தமிழ்தேசியம் கொள்கை :
அரசியல் கோட்பாடுகள் நிலைப்பாடுகள் இன்று நிற்கும் நாளை மாறும் …..
தா அருமை டா நல்லா ஜம்முனு தம்பிகளுக்கு விளக்க வெச்சிச்சுட்டுட்டு போய்ட்ட நீ தாண்டா
அரசியல்வாதி அருமை டா 🗣️🗣️🗣️🗣️ pic.twitter.com/3L4dN1djWv— Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) July 26, 2026
காலத்திற்கு ஏற்ப எண்ணங்களும் நிலைப்பாடுகளும் மாறுவதுதான் இயல்பு” என்று வெளிப்படையாகவே வாதாடினார். பாஜக மேடையில் நின்று கொண்டே, கட்சி மாறுவதையும் பாஜகவின் நிலைப்பாட்டையும் சீமான் இவ்வாறு நியாயப்படுத்திப் பேசியிருப்பது, அவர் பாஜகவை நோக்கிச் செல்கிறாரோ என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.
