தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் இனி விடியல் பயண திட்டம் என்று அழைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.

அதன் பிறகு சுதந்திர தின உரையாற்றியவர் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு விடியல் பயணம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் அறிவித்துள்ளார்.