ஒடிசா மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர்களுக்கு  அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு 500க்கு பதிலாக ஆயிரமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 700 க்கு பதிலாக 1200 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது ஒடிசா கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகையின் காரணமாக வயதான கட்டுமான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.