தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு மூலமாக மக்களிடம் தெரிவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாளிதழில் வரும் விளம்பரத்துடன் இடம்பெறும் க்யூ ஆர் கோடை அலைபேசியில் ஸ்கேன் செய்து அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் பேசும் வீடியோவை மக்கள் பார்க்க முடியும். Augmented reality தொழில்நுட்பம் மூலமாக இந்த வீடியோ பதிவு வெளியிடப்படுகின்றது.