ஈரான் நாட்டில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆக இருக்கிறது. இதனை தற்போது 9 ஆக குறைக்கும் புதிய சட்ட மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண்களின் திருமண வயது 9 ஆகவும், ஆண்களின் திருமண வயது 15 ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா சட்டமாகும் பட்சத்தில் அது குழந்தை திருமணமாக மாறிவிடும்.
ஏற்கனவே ஐநா தகவலின் படி 28 சதவீதம் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த வயது குறைக்கப்பட்டதால் இன்னும் அதிக அளவில் குழந்தை திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் இதன் காரணமாக இந்த புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
