இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பல நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை விநியோகம் செய்து வரும் நிலையில் சிலிண்டரை முன்பதிவு செய்து வாங்குவது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஒரு கால் செய்தால் ஊழியர் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்து விடுவார்கள். இல்லையென்றால் whatsapp அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். Indane கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள்  7588888824 என்ற நம்பரை தொடர்பு கொண்டு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

அதே நம்பருக்கு வாட்ஸ் அப்பில் புக் என டைப் செய்து அனுப்பினால் நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் பெறப்பட்டது என்று மெசேஜ் வரும் அப்படி வந்தால் உங்களுடைய சிலிண்டர் முன்பதிவு செய்து கொள்ளப்பட்டது என்று அர்த்தம். அதனைப் போலவே HP காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 92222 01122  என்ற எண்ணில் சிலிண்டரை புக் செய்யலாம். Bharat petroleum வாடிக்கையாளர்கள் 1800224344  என்ற எண்ணில் கால் செய்து அல்லது whatsapp மூலமாக மெசேஜ் அனுப்பி சிலிண்டரை புக் செய்யலாம். அதே சமயம் சிலிண்டருக்கான தொகையை கூகுள் பே மற்றும் போன் பே அல்லது கிரெடிட் கார்டு மூலமாக நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.