இந்தியாவில் பொதுவாக பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பீகார் செல்லும் பொது மக்களின் வசதிக்காக டெல்லியில் இருந்து பல சிறப்புரைகள் இயக்கப்படும் என்றும் டெல்லியில் இருந்து உத்திரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே தமிழகத்திலும் சென்னையிலிருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் வழித்தடத்தில் கூடுதலாக நான்கு சிறப்பு ரயில்களும், கோவைக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு ரயில்கள் என மொத்தமாக சென்னையிலிருந்து மட்டுமே ஆறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விருப்பமுள்ள பொதுமக்கள் தற்போததே முன்பதிவு செய்து கொள்வது நல்லது.