இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்றுமதி இறக்குமதியை பொறுத்து உள்நாட்டில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. அதாவது உள்நாட்டு வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் 1118.50 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. இந்நிலையில் கேஸ் சிலிண்டர் புக் செய்வோருக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ஒரே நாளில் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் Indane என்ற பெயரில் பெரும்பாலான வீடுகளுக்கு கேஸ் சப்ளை செய்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். அவர்களது சேவையை மெருகேற்றும் பொருட்டு, இனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவர்கள் கேஸ் டெலிவரி செய்ய இருக்கின்றனர்