இந்தியாவில் வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு சட்டத்தை மீறினால் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருந்தாலும் இந்த சட்டங்களை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.