உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்று இன்ஸ்டாகிராம் செயலியில் வெளியிடப்பட உள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செக்ஷனில் ரீல்ஸ் மூலம் ரீப்ளே செய்யும் புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. இதன் மூலமாக பயனர்களின் நேரடியான வீடியோக்களையும் கேலரியில் உள்ள வீடியோக்களையும் கமெண்ட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.