இன்ஸ்டாகிராம் செயலியை ஏராளமான பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இனி இன்ஸ்டாகிராம் பயனரின் லொகேஷன் ஷேர் செய்யும் வகையில் FRIEND MAP என்ற புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. மற்ற அம்சங்களைப் போல இதற்கான பிரைவசி செட்டிங் உள்ளது. இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.