நடிகை ஹன்சிகா மோத்வானி, தனுஷுடன் ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமாகி ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹேல் கதுரியாவைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் தனித்தனியாக வசித்து வந்தனர். தற்போது மும்பை நீதிமன்றம் இவர்களுக்குப் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து வழங்கியுள்ளது.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwanni (@ihansika)

“>
இந்த விவாகரத்தின் போது கணவரிடம் இருந்து எந்தவித ஜீவனாம்சமும் ஹன்சிகா பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விவாகரத்திற்குப் பிறகு தனது நிலையை வெளிப்படுத்தும் விதமாக ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘சர்தி கலா’ (Chardi kala always) என்று பஞ்சாபி மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு “வாழ்க்கையில் எவ்வளவு சவால்கள் வந்தாலும், அதை நேர்மறையாகவும் தைரியமாகவும் எதிர்கொண்டு முன்னேற வேண்டும்” என்று அர்த்தம். இதன் மூலம் தான் மிகவும் உறுதியுடனும் வலிமையுடனும் இருப்பதை அவர் தனது ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.