ஐபிஎல் 2026 தொடரில் 237.30 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டில் 72 சிக்ஸர்களுடன் 776 ரன்கள் குவித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்து, எல்எஸ்ஜி (LSG) உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை நெகிழ்ச்சியில் உருக வைத்த 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, இப்போ தனது ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு மாற்றப் போவதாக அறிவித்து புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்!

‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நேர்காணலில் பேசிய வைபவ், “அடுத்தது 50 ஓவர் ஒன்டே மேட்ச் என்பதால் இனிமேல் நான் கிரவுண்ட் ஷாட்களை (Ground Shots) அதிகம் விளையாடுவேன், ரெட் பால் கிரிக்கெட்டிலும் கடுமையான பயிற்சி எடுத்துள்ளேன்” என்று தன் புதிய அவதாரத்தை ஓப்பனாக சிக்னல் கொடுத்துள்ளார்.

அண்டர்-19 உலகக்கோப்பை ஃபைனலில் 175 ரன்கள் குவித்து, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான குவாலிஃபையர்-2 போட்டியில் இக்கட்டான சூழலில் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசித் தான் ஒரு ‘ஆல் ஃபார்மேட்’ பிளேயர் என்பதை நிரூபித்த வைபவ், ஜூன் 9 முதல் தொடங்கவுள்ள இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிரான முத்தரப்புத் தொடருக்கான திலக் வர்மா தலைமையிலான இந்தியா-ஏ அணியில் இடம்பிடித்துள்ளார்.

காயம் காரணமாக ரியான் பராக் விலகியிருந்தாலும், ருதுராஜ், பிரப்சிம்ரன், ஆயுஷ் பதோனி, ராயல்ஸ் வீரர் யுத்வீர் சிங் உள்ளிட்ட இளம் சிங்கங்களுடன் களம் காணும் வைபவ்வின் இந்த புதிய கிளாசிக் அவதாரம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போதே எகிற வச்சிருக்கு..!