இந்திய அணியின் இளம் நட்சத்திரம் ஷுப்மன் கில்லின் சர்வதேச டி20 ஃபார்ம் மற்றும் கேப்டன்சி குறித்து முன்னாள் அதிரடி ஜாம்பவான் விரேந்தர் சேவாக் கிரிக்பஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அதிரடியான விமர்சனம் இப்போ கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது!

“நீங்க கேப்டனாக இருப்பதாலேயே ரன்கள் எடுக்க மாட்டீர்கள் என்று அர்த்தமில்லை; ஒரு கேப்டனாக முன்னின்று ரன் குவித்து வழிநடத்த வேண்டும்” என்று கில்லை கறாராகச் சாடியுள்ளார் சேவாக். ஐபிஎல் 2026-ல் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை இறுதிப்போட்டி வரை கேப்டனாக  வழிநடத்தி, 16 போட்டிகளில் 732 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி (Orange Cap) பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்திய கில், இந்திய சர்வதேச டி20 போட்டிகளில் தனக்குக் கிடைத்த 7 முதல் 10 வாய்ப்புகளைச் சொதப்பி கோட்டை விட்டதாகச் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு கில் மட்டும் ரன் அடித்திருந்தால், சூர்யகுமார் யாதவை கேப்டனாக மாற்ற வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றும், இந்திய அணியின் 3 ஃபார்மேட்டுகளுக்கும் கில்லே ஒரே கேப்டனாக மகுடம் சூடியிருப்பார் என்றும் போட்டு உடைத்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் கில் சொதப்பியதால், ஃபார்மில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு வழிவிட வேண்டியதாகிவிட்டது என்று சேவாக் ஓப்பனாகப் பேசியிருப்பது, ஆர்சிபி அணியிடம் ஐபிஎல் ஃபைனலில் தோற்ற சோகத்தில் இருந்த குஜராத் ரசிகர்களுக்கும், கில் ஆர்மிக்கும் இப்போ செம அதிர்ச்சியைக் கொடுத்து உள்ளது.