விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 84 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இதில் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீனா, மணிச்சந்திரா, மாயா, தினேஷ், நிக்சன் மற்றும் விஷ்ணு என ஆறு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் நிச்சயமாக இரண்டு நாமினேஷன் இருக்கும் என்றும் அதில் யார் வெளியேறுவார்கள் என்றும் எதிர்பார்ப்பு வாரத்தின் முதல் நாளே தொடங்கிவிட்டது.