கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.22-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.178.7 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகி 3 நாட்களை கடந்த நிலையில் இதுவரை மொத்தமாக இப்படம் ரூ.402 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.