பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் மக்கள் நல பணிகளிலும் சமூக சேவைகளை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் ஏழைகளின் கண்ணீர் துடைக்க தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வரும் நிலையில் பீகாரை சேர்ந்த 65 வயது முதியவர் தன்னுடைய மனைவியின் மருத்துவ செலவுக்காக வாங்கிய 12 லட்சம் கடனால் பெரும் இன்னல்களை சந்தித்து வந்துள்ளார்.

ஆனால் அவரின் மனைவி சமீபத்தில் இறந்து விட்ட நிலையில் இதனால் மணமுடைந்து போன முதியவர் நடிகர் சோனு சூட்டை அணுகியுள்ளார். இதனைக் கண்டு மனம் இறங்கிய சோனு 12 லட்சம் ரூபாய் கொடுத்து கடனிலிருந்து மீட்டு புது வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டுக் கொடுத்துள்ளார். இவரின் இந்த சேவைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.