நடிகர் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 529.46 கோடி வசூல் செய்த நிலையில், இந்தியா முழுவதும் ரூ.55 கோடியும், உலகம் முழுவதும் ரூ.96 கோடியும் வசூல் ஈட்டியுள்ளது. தமிழ் படம் ஒன்று முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தொடர் விடுமுறை வருவதால் விரைவில் ரூ.200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.