நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக காலமானார். கோவையில் உள்ள அவர்களது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் தகவல் அறிந்து கோவை விரைந்திருக்கிறார். நாளை தாயார் நாதாம்பாளின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று தெரிகிறது. சத்யராஜின் மகன் சிபிராஜ், மகள் திவ்யா ஆகியோரும் கோயம்புத்தூர் விரைந்திருக்கின்றனர். திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.