நடிகர் MRR வாசு அவர்களின் மனைவியும் நடிகர் வாசு விக்ரம் அவர்களின் தாயாருமான லலிதாம்மாள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 83. சென்னை கோடம்பாக்கம் ஆர் என் நம்பியார் தெருவில் உள்ள வாசுவின் வீட்டில் இவரின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலுக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரைத்துறையினர் பலரும் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளனர்.