விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் தன்னால் முடிந்த உதவிகளை செய்து மக்கள் மனங்களில் தனி இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் விபத்தில் பார்வையை இழந்த மாதேஸ்வரன் என்ற சிறுவனின் வீட்டுக்கு சென்ற பாலா சிகிச்சைக்கான நிதி உதவியை நடிகர் லாரன்ஸ் உதவியோடு வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.