இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகளின் வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. வீடுகளில் அதிகமாக பூனைகள் மற்றும் நாய்கள் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகிறது. அதில் பூனைகள் வீடுகளில் செய்யும் சேட்டைகள் மற்றும் அதற்காக கொடுக்கும் ரியாக்ஷனுக்கு அளவே கிடையாது. அது போன்ற நேரங்களில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து அதனை பலரும் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அவ்வகையில் பூனை ஒன்று தன்னுடைய வயிற்றுப் பகுதியை மட்டும் ஒரு தொட்டியில் உள்ள கம்பிக்குள் விட்டுக்கொண்டு தடுமாறுகிறது. அந்த வயிற்றை வெளியே எடுக்க முயற்சிக்காமல் மேலும் உள்ளே தள்ளத்தான் அந்த பூனை முயற்சிக்கிறது. இதனை பார்க்கும் போது சிரிப்பாக இருந்தாலும் அந்த பூனையின் செயல் பிரமிக்க வைக்கிறது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

CatVersum இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@catversum)