இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் மார்ச்.28ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கோட் லைஃப்’. இந்த படம் குறித்து நடிகர் பிருத்விராஜ் சமீபத்தில் அளித்த நேர்காணலில்,“இந்த படத்தில் எனது உடல் எடையை குறைக்கவேண்டி இருந்தது. அதற்காக நான் 72 மணி நேரம் சாப்பிடாமல் இருந்தேன்.

இது சரியான முறையா? என எனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இதை தவிர வேறு வழி கிடைக்கவில்லை. படத்தில் வரும் அந்த காதாபாத்திரத்தை மக்களுக்கு உணர வைக்க வேண்டும் என்பதற்கான நான் இதை செய்தேன்” என்றார்.