நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு தனது 60ஆவது வயதில் 44 வயது நடிகை பவித்ரா லோகேஷை 4வது திருமணம் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். முதலில் நரேஷ் பாபு ஸ்ரீனு என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்துவிட்டு ரேகா சுப்ரியா என்பவரை திருமணம் செய்தார்.

அவரையும் விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவதாக தன்னைவிட 20 வயது குறைவான ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்தார். இந்த மூவருக்கும் தலா ஒரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது 60ஆவது வயதில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நரேஷ் பாபு- பவித்ரா திருமணம் செய்துகொண்டுள்ளார். இது பவித்ராவுக்கு 2வது திருமணமாகும்.