பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களை இயக்கி வருகின்றார். அந்த படத்திற்கு “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சில தகவல்களின்படி மங்காத்தா திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போட்ட அந்த மாஸ் பிஜிஎம்-ஐ போலவே தளபதிக்காக மிகச் சிறந்த முறையில் ஒரு BGMஐ அவர் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏப்ரல் 14ம் தேதி GOAT படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். அதே போல ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் அவர்களுடைய பிறந்தநாள் அன்று இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.