இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அவை ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது. எனவே இந்த வங்கியில் உங்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் பெரிய சலுகை கிடைக்கும் .எஸ்பிஐ வங்கியின் சிறப்பு வீட்டுக் கடன் திட்டத்திக் இணைவதற்கான தேதியை ஜனவரி 31 வரை அவ்வங்கி நீட்டித்துள்ளது. முன்னதாக இந்த காலக்கெடு டிசம்பர் 31 ஆக இருந்தது.

அதன் பிறகு தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி 65 அடிப்படை புள்ளிகள் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடி அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் செல்லுபடியாகும். இதில் Flexipay, NRI, சம்பள வகுப்பு ஆகியவை அடங்கும்.