இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செல்லாது என கூறி ரிசர்வ் வங்கி சமீபத்தில் திரும்பப்பெற்றது. இதனைத் தொடர்ந்து ரூ.500 நோட்டும் செல்லாது என தற்போது வதந்தி கிளம்பியுள்ளது. அதன் படி ரூ.500 நோட்டின் எண்களின் வரிசை எண்ணில் * குறியீடு கொண்ட நோட்டுகள் செல்லாது என்ற வதந்தியால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஆனால், 2016 ஆம் வருடம் முதல் * குறியீடு கொண்டு 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும் இது தொடர்பான வதந்தியை மக்கள் யாரும்  நம்ப வேண்டாம் என ஆர்பிஐ தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.