இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீடியோ எடுத்து புகழ் பெறுவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக உயிர் இழப்பு சம்பவங்கள் கூட நடைபெறுகிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் மோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சடாரா மாவட்டத்தில் தற்போது சமூக வலைதள புகழுக்காக கல்லூரி மாணவன் ஒருவர் செய்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக காரை வைத்து ஸ்டண்ட் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக 300 அடி பள்ளத்தில் வாலிபர் காருடன் கீழே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
