தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை” என்று மேடைகளில் சொல்வதை அவரது தொண்டர்கள் உணர்வுப்பூர்வமாக நிரூபித்து வருகின்றனர். அதன் உச்சகட்டமாக, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திருமணப் பத்திரிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தத் திருமண அழைப்பிதழில், உறவினர்கள் பக்கத்தில் அண்ணன்கள் வரிசையில் முதல் பெயராக “ஜோசப் விஜய், தமிழக வெற்றி கழகத் தலைவர்” என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்த அன்பெல்லாம் யாருக்கும் கிடைச்சது இல்ல @TVKVijayHQ 🥹 pic.twitter.com/WQYcpYnYo3
— priya (@PriyankaSmile01) April 20, 2026
தனது வீட்டுத் திருமணத்தில் சொந்த அண்ணனுக்குக் கொடுக்கும் அதே மரியாதையைத் தனது தலைவருக்கு கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “இந்த அன்பு வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கிடைத்ததில்லை” எனத் தவெக தொண்டர்கள் இந்தப் புகைப்படத்தை எக்ஸ் (X) தளத்தில் கொண்டாடி வருகின்றனர். ஒரு அரசியல் தலைவரைத் தாண்டி, ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளையாகவே மக்கள் விஜய்யைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு இந்தத் திருமணப் பத்திரிகையே சாட்சி எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
