குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில், சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்திற்கு ஆறாத வடுவை ஏற்படுத்தும் வகையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் (Swimming Pool) ஒன்றாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் அடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர், திடீரென குளத்திலேயே மயக்கமடைந்து தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார்.
यह भयावह दृश्य है
राजकोट जिले में एक परिवार पुल में एक साथ नहा रहा था तभी एक युवक स्विमिंग पूल में डूब गया और उसकी मौत हो गई।
पूल में तैरते समय वह अचानक बेहोश हो गया और पानी में डूब गया। पूरी घटना रिज़ॉर्ट के सीसीटीवी कैमरों में कैद हो गई। pic.twitter.com/wwi58KiKth
— Priya singh (@priyarajputlive) April 20, 2026
அவர் மயக்கமடைந்து தண்ணீருக்குள் போராடுவதைக் கவனிக்கத் தவறியதால், அந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த ஒட்டுமொத்தப் பதறவைக்கும் காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் அருகில் இருக்கும்போதே ஒரு இளைஞர் நீரில் மூழ்கிப் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாட்களைக் கழிக்கச் செல்பவர்கள் நீர்நிலைகளில் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
