சென்னையிலி்ல் ஆசிய சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினார்கள். இவர்கள் உடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.

நான்காவது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வீரர்களுக்கும்  தலா 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 2 1/2 லட்ச ரூபாய் பரிசு தொகையும் பரிசாக அறிவிக்கப்பட்டது.