தமிழகத்தின் தற்போது அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாதம் நிலா என்ற குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் எனவும் பிரபல எழுத்தாளர் ஞானி இயக்கிய தமிழ் மொழி படமான நிலா 2017 ஆம் ஆண்டு வெளியான நிலையில் குழந்தைகளின் சிக்கன்களுக்கான தீர்வை முன்வைத்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் இந்த குறும்படத்தை ஒளிபரப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான பாட வேலைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்தப் பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். படத்தை திரையிடுவதற்கு முன்பு அந்த படத்தை பொறுப்பாசிரியர் பார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.