தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சமுதாயத்தில் மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய குழந்தைகளின் நலனை உறுதி செய்ய அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நல சேவைகள் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

அதனால் அங்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி என பல வாய்ப்புகள் கிடைக்காத குழந்தைகளுக்கு அவர்களை நிலையறிந்து சேவை செய்வது என்பதை மிக முக்கியமான ஒன்றாகும். எனவே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வது அவசியம். மேலும் அங்கன்வாடி மைய கட்டிட நிலை, கழிப்பறை வசதி, தண்ணீர் விநியோகம் மற்றும் அங்கன்வாடி மைய சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு அளித்தல் ஆகிய சேவைகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது