இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியின் தற்போதைய ஃபார்ம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அப்ரிடியின் பந்துவீச்சில் முன்பிருந்த வேகம் மற்றும் துல்லியம் இப்போது மிஸ்ஸிங் என்று கூறிய பதான், அவர் பந்துகளை இலக்கின்றி வீசுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறிப்பாக, இந்தியாவிற்கு எதிரான முக்கியமான போட்டிகளில் இந்த பலவீனம் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை துவம்சம் செய்வார்கள் என்றும் பதான் எச்சரித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Star Sports India (@starsportsindia)

“>

மேலும் சமீபகாலமாக ஷாஹீன் அப்ரிடி காயங்களுக்குப் பிறகு தனது பழைய ஃபார்மை மீட்டெடுக்கப் போராடி வருகிறார். இதைக் குறிப்பிட்ட இர்பான் பதான், பந்துவீச்சின் போது அப்ரிடி போதிய கவனமின்றி செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் “அவர் கண்களை மூடிக்கொண்டு பந்துவீசுவது போல் தெரிகிறது” என்ற ரீதியில் பதானின் விமர்சனம் அமைந்துள்ளது. எதிர்வரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அணிக்கு இது ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.