ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வினேஷ் போகட் விலகியுள்ளார்..

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என வினேஷ் போகட் சமூக ஊடகங்களில் பதிலளித்துள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம் “மிகவும் துக்கமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆகஸ்ட் 13 பயிற்சியின் போது என் முழங்காலில் காயம் ஏற்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். வினேஷ் போகட் ட்விட்டரில் எழுதினார்.

“ஆகஸ்ட் 17ஆம் தேதி மும்பையில் அறுவை சிகிச்சை செய்யப்படும். 2018-ல் ஜகார்த்தாவில் வென்ற தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்கு தக்கவைக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால் காயம் எனது வாய்ப்புகளை அழித்துவிட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு எனக்குப் பதிலாக ரிசர்வ் வீரரை அனுப்ப அதிகாரிகளுக்கு தெரிவித்துளேன்.

அனைத்து ரசிகர்களும் தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இதனால் நான் விரைவில் மீண்டு பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தயாராக முடியும். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த பலத்தை அளிக்கிறது”என தெரிவித்துள்ளார்..

எனவே இதன் மூலம், அவருக்குப் பதிலாக 53 கிலோ பிரிவில் ஆன்டிம் பங்கல் களம் இறங்குகிறார்.காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் வினேஷ் போகட். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

வினேஷ் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ஆசிய விளையாட்டு சோதனைகளில் இருந்து விலக்கு பெற்றனர். இதற்காக அவர் மல்யுத்த சமூகத்தால் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.