அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியுள்ளது. இதனை www.cricketworldcup.com/register என்ற பக்கத்தில் பதிவு செய்யலாம். தற்போது பதிவு செய்தவர்கள் இந்த மாதம் 25 ஆம் தேதி முதல் டிக்கெட் வாங்கலாம். இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு 25,30, 31 செப்டம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.