ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் முற்றி வருவதால் உலக நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஈரான் ‘ஹர்முஸ்’ (Strait of Hormuz) கடல் பாதையை மூடியதால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது நண்பனான இந்தியாவுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கப் பல நாடுகள் வரிசையில் நின்றாலும், இந்தியாவுக்கு விநியோகம் செய்வதற்கே தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே உக்ரைன் போரின்போது இந்தியாவுக்குக் குறைந்த விலையில் எண்ணெய் வழங்கி உதவிய ரஷ்யா, தற்போதும் தட்டுப்பாடின்றி எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

அதேபோல், ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக ‘ஹர்முஸ்’ பாதையைத் திறந்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இது தவிர, அர்ஜென்டினா மற்றும் அமெரிக்காவிடமிருந்தும் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளதால், நாட்டில் நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.