மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் பிடியில் உள்ள ‘ஹோமுஸ்’ (Strait of Hormuz) கடல் பாதையை மீண்டும் திறக்க வைக்கவும், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு அதிரடி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஈரானின் கடற்கரையிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள மிக முக்கியமான ‘கார் தீவை’ (Kharg Island) குறிவைத்து சுமார் 2,500 அமெரிக்க மரைன் வீரர்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் இந்தத் தீவின் வழியாகவே நடப்பதால், இதைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அல்லது முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே ஈ ரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த தரைப்படை வருகை போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகளால் டிரம்ப் தனது சீனா பயணத்தையே ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.