இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவை எம்.பி மற்றும் மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அவையில் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான்  மற்றும் பிற உருமாறிய தொற்று வகைகள் தொடர்ந்து இந்தியாவில் அதிகம் பரவி வருகிறது. அவற்றில் எஸ்.பி.பி, பிகியூ போன்றவை நாட்டில் பரவலாக மேலோங்கி காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் சில நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தும் அந்த நாடுகளின் வழியே வரக்கூடிய விமான பயணிகள் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை சான்றிதழ்களை கொண்டு வருவது அவசியம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் அனைத்து சர்வதேச விமான பயணிகளிடம் இரண்டு சதவீதம் என்னும் அளவில் இந்திய வருகைக்கு கொரோனா பரிசோதனைகள் விமான நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.