தான்சானியாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் ஹட்ஸபே பழங்குடியினர், இன்று வரை பசுமை காடுகளிலும், வேட்டையிலும் வாழும் மக்கள்.
இவர்களுக்கு இந்தியாவில் பிரபலமான இனிப்பு ‘ரசகுல்லா’வை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் இந்திய பயண வலைப்பதிவர் வினோத் குமார். Instagram-இல் @roamingvinu என்ற பெயரில் இயங்கும் அவர், தனது பயண அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஹட்ஸபே மக்களுக்கு இந்திய தேநீர், பார்லே-ஜி பிஸ்கட் மற்றும் ரசகுல்லா கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.
வீடியோவில், ரசகுல்லா சிரப்பை ருசித்த ஹட்ஸபே பழங்குடியினர் ஒருவர், குழந்தைமயமான மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்த காட்சி பார்ப்போரை நெகிழவைக்கிறது. அந்த மகிழ்ச்சியான நிகழ்வை பார்ப்பவர்கள், அவரின் இயற்கையான உணர்வுக்கு கைதட்டுகிறார்கள். ரசகுல்லாவின் சுவை அவரை அதீத உற்சாகத்துக்கு அழைத்துச் சென்றது. இந்த வீடியோ இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
View this post on Instagram
“>
மக்கள் இதைப் பார்த்து நெகிழ்ச்சியாகவும், நகைச்சுவையாகவும் தங்கள் கருத்துகளைப் பதிவிடுகின்றனர். “ரசகுல்லா சிரப்பை குடித்ததும் குழந்தையைப் போல குதித்தார்” என ஒருவர், “நான் பசும்பாலில் பால் பவுடர் கலந்து குடித்த ஞாபகம் வந்தது” என மற்றொருவர், என வேடிக்கையாக பலர் எழுதியிருக்கிறார்கள். உண்மையில், இந்திய இனிப்பு ஒரு ஆப்பிரிக்க பழங்குடியினரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை வரவழைத்தது என்பதே இந்த வீடியோவின் அழகு!
