பிரிட்டனில் அதிர்ச்சியும், கோபத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு போலீஸ் அதிகாரி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் காவல்துறையில் பணியாற்றிய மார்சின் ஜீலின்ஸ்கி என்ற அதிகாரி, கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது, அந்த பெண்ணின் உள்ளாடையை தனது பின்பக்கம் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது, அந்த பெண் டிக்டோக்கில் வீடியோவையும், சம்பவ விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் தனது பதிவில், “பொலிஸார் வீட்டை சோதனை செய்த போது நான் கைது செய்யப்பட்டு கைவிலங்கிட்டு சென்றேன். என் வீட்டில் சிசிடிவி இருப்பதால், ஜீலின்ஸ்கி உள்ளாடை டிராயரைத் திறந்து ஒரு ஜோடியை எடுத்து தனது பாக்கெட்டில் வைக்கும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது” என கூறியுள்ளார்.

அந்த வீடியோ வெளியாகியதும், பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், காவல்துறையினர் அந்த வீடியோவை கைப்பற்றி, ஜீலின்ஸ்கியை விசாரித்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கேம்பிரிட்ஜ் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு 4 மாத சிறைத்தண்டனை விதித்தது.

“>

 

இந்த சம்பவம் குறித்து ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் காவல் துறையின் உதவி தலைமை காவலர் ஜென்னா டெல்ஃபர் தெரிவித்ததாவது: “ஜீலின்ஸ்கியின் இந்தச் செயல், பொதுமக்கள் நம்பிக்கைக்கும், காவல்துறையின் மதிப்புக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது தொழில்முறை ஒழுங்கையும், சமூக பொறுப்பையும் முற்றிலும் மீறியுள்ளார்” என்று கூறினார். இந்த விவகாரம் டிக்டோக்கில் பரவலாக பகிரப்பட்டு, பலரது விமர்சனங்களை பெற்றுள்ளது