அமெரிக்காவின் FBI அமைப்பால் ‘மோஸ்ட் வாண்டட்’ பட்டியலில் சேர்க்கப்பட்ட சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் (வயது 40) என்ற பெண், மகனை கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிய நிலையில் இன்டர்போலுடன் இணைந்து இந்திய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிண்டியின் மாற்றுத்திறனாளி மகன் 2022 ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து காணாமல் போன நிலையில், 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் கூறிய முகவரியில் போலீசார் சோதனை செய்தபோது, அந்தப் பையன் எங்கும் இல்லை என்பதும், விமானத்தில் இந்தியாவுக்கு வந்தபோது அவருடன் அந்த சிறுவன் இல்லாததும், சிண்டி மீது கொலை சந்தேகம் எழ வேண்டிய காரணமாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2023 அக்டோபரில் சிண்டி ரோட்ரிக்ஸ் மீது அதிகாரபூர்வமாக குற்றம் சுமத்தப்பட்டது. Interpol வழியாக ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. விசாரணையில் இருந்து தப்பித்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்ததாகவும், தன் கணவர் மற்றும் 6 சிறுவர்களுடன் இந்தியாவில் ஒளிந்திருப்பதாகவும் தெரிந்தது.
சிண்டி குறித்து தகவல் கூறுபவர்களுக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என FBI அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவால் கைது செய்யப்பட்ட நிலையில், அமெரிக்கா தரப்பில் தீவீர விசாரணை நடக்கவிருக்கிறது.
