டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் மலர் விற்பனையாளர் ஒருவரிடம் பெண் ஒருவர், “இந்தியாவில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்களா?” என்று கேட்ட கேள்விக்கு, அந்த விற்பனையாளர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் சோனாலி சிங் என்ற உள்ளடக்க உருவாக்குநரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த விற்பனையாளர் இன்றைய காலக்கட்டத்தில் உறவுகள் மற்றும் சமூக மதிப்புகள் மாறிவிட்டதை மிகவும் முதிர்ச்சியுடன் விவரித்துள்ளார். பெண்களுக்கு வீட்டில் கிடைக்கும் அங்கீகாரம் குறைந்துள்ளதையும், இன்றைய சமூக ஊடக உலகில் வெளிப்படையான தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
View this post on Instagram
“>
இந்நிலையில் உணர்ச்சிகரமான பிணைப்பை விட, புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இன்றைய கலாச்சாரத்தை விமர்சித்த அவரது கருத்துக்கள், சமூக வலைதள பயனர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளன. கல்வியை விட அனுபவமும், முதிர்ச்சியும் மிக்க அவரது இந்த பதில் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
