உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2026-ல் இந்தியா 157-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. உலக பத்திரிகை சுதந்திர தினமான, ஜனநாயகத்தின் குரலாக விளங்கும் ஊடக சுதந்திரம் தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா “மிகவும் மோசமான” நிலைக்குச் சென்றிருப்பது கவலையளிப்பதாகவும், உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்களுக்குத் தாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என்றும் காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கங்களுக்கு நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் தேதி இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
<a href="http://
A free press is the voice of democracy, but today that voice is under attack. India ranks 157 in the World Press Freedom Index 2026, falling into the “very serious” category.
On World Press Freedom Day, the Congress party stands firmly with every fearless voice that speaks truth… pic.twitter.com/qbluVtzaqW
— Congress (@INCIndia) May 3, 2026
“>
1993-ல் ஐநா சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த நாள், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கவும், கடமையின் போது உயிர்நீத்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க பத்திரிகையாளர்கள் உருவாக்கிய ‘விண்ட்ஹோக் பிரகடனம்’ தான் உலகளவில் பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான அடிப்படை வழிகாட்டியாக இன்றும் பார்க்கப்படுகிறது.
